உயர்தர சிகிச்சை அனைவருக்கும் சென்றடைய வேண்டும்: கியூரி மருத்துவமனையின் இயக்குநர் அனந்த கிருஷ்ணன் சிவராமன் கருத்து

உயர்தர சிகிச்சை அனைவருக்கும் சென்றடைய வேண்டும்: கியூரி மருத்துவமனையின் இயக்குநர் அனந்த கிருஷ்ணன் சிவராமன் கருத்து
Updated on
1 min read

சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் உள்ளகியூரி மருத்துவமனையில் (சென்னை சிறுநீரகம் மற்றும் ரோபோட்டிக்ஸ் நிறுவனம்) டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்காக ஆதரவுக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் குழு சார்பில் மருத்துவமனை வளாகத்தில் நேற்று கலந்தாய்வு கூட்டம் நடந்தது. தீபாவளிகலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கியூரி மருத்துவமனையின் டயாலிசிஸ் ஆதரவுக் குழுவினர்மற்றும் விஸ்ராந்தி இல்லத்தில் வசிக்கும் முதியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியை கியூரி மருத்துவமனையின் தலைவர் பி.பி.சிவராமன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து முதியோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சார்பில் பரத நாட்டியம், கும்மிப்பாட்டு, கோலாட்டம், ரங்கீலா போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 94 வயது மூதாட்டியான லலிதாவின் ‘ஓ ரசிக்கும் சீமானே’ நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

நிகழ்ச்சியில் க்யூரி மருத்துவமனை இயக்குநர் அனந்த கிருஷ்ணன் சிவராமன் பேசியது: இந்த மருத்துவமனை 2018 டிசம்பரில் தொடங்கப்பட்டது. அதிநவீன சிகிச்சை வசதிகள் அனைத்துதரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

இங்கு வரும் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சையை வழங்குவது மட்டுமின்றி அவர்கள் மீதான அக்கறை, கவனிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். இங்கு டயாலிசிஸ், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை, ரோபோட்டிக் இயந்திர அறுவைச் சிகிச்சை உட்பட சிறந்த மருத்துவ வசதிகள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

சிறுநீரகவியல் நிபுணர் மருத்துவர் அஜய் ரத்தூன் பேசும்போது, ‘‘எங்கள் மருத்துவமனை சார்பாக சிறுநீரகம், நரம்பியல் துறை சார்ந்தஇலவச மருத்துவ முகாமை பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகிறோம். மாதந்தோறும் ஒவ்வொரு ஊராக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

உணவுக் கட்டுப்பாடு போன்றதுதான் டயாலிசிஸ். இதை சரியாக பின்பற்றினால் நோயாளிகள் நீண்டநாட்கள் வாழலாம். எங்கள் மையத்தில் டயாலிசிஸ் செய்பவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதில்லை. நீரிழிவு நோய் பாதிப்புள்ள மூன்றில்ஒருவருக்கு சிறுநீரகப் பாதிப்பு இருக்கும்.

டயாலிசிஸ் தொடங்கினாலே நோயாளிகள் உயிரிழப்பார்கள் என்பது கிடையாது. 30 ஆண்டுகள் வரை சிகிச்சை பெற்றவர் கூட உள்ளனர்" என்றார். இந்நிகழ்வில் க்யூரி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் காயத்ரிஅனந்தகிருஷ்ணன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in