தமிழகத்தில் 2 நாள் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 2 நாள் மழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையஇயக்குநர்செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் (நவ. 2, 3), இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி,திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம்,தருமபுரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சிலபகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in