

சென்னை: சென்னை ரங்கநாதன் தெரு - ரயில்வே பார்டர் சாலையில் அரசு நிலத்தில் அமைந்திருந்த விளையாட்டு விநாயகர் கோயில் மற்றும் 22 ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து நான்கு வாடகைதாரர்கள் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் 2018-ம் ஆண்டு இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ராஜசேகர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கோயில் அமைந்துள்ள நிலம், கோயிலுக்குச் சொந்தமானது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. வருவாய்த் துறை ஆவணங்கள் மூலம் அந்த நிலம் அரசு நிலம் என்பது தெளிவாகிறது. கோயிலில் உள்ள சிலைகளை வேறு இடத்துக்கு 15 நாட்களுக்குள் கோயில் நிர்வாகம் மாற்ற வேண்டும். இந்த உத்தரவை செயல்படுத்த தவறினால், 15 நாட்களில் கோயிலை இடிக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.