Published : 21 Jan 2018 07:31 am

Updated : 21 Jan 2018 07:37 am

 

Published : 21 Jan 2018 07:31 AM
Last Updated : 21 Jan 2018 07:37 AM

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி: அவரை, நூக்கல், கோஸ் கிலோ ரூ.5-க்கு விற்பனை

5

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் அவற்றின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் கடந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது. அதனால் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. அதன் காரணமாக பல்வேறு காய்கறிகளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

கோயம்பேடு சந்தையில் நேற்று, அவரைக்காய், நூக்கல், முட்டை கோஸ் ரூ.5, தக்காளி, முள்ளங்கி தலா ரூ.7, பாகற்காய், புடலங்காய் தலா ரூ.8, பீன்ஸ், பீட்ரூட் தலா ரூ.9 என விலை குறைந்திருந்தது. மேலும், வெங்காயம் ரூ.42, உருளைக்கிழங்கு ரூ.13, சின்ன வெங்காயம் ரூ. 35, வெண்டைக்காய் ரூ.10, முருங்கைக் காய் ரூ.100-க்கு விற்கப்பட்டது.

காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்திருப்பது தொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச் சங்க நிர்வாகி எஸ்.எஸ்.முத்துகுமார் கூறும்போது, “கடந்த ஆண்டு எல்லா இடங்களிலும் நல்ல மழை பெய்துள்ள நிலையில் கடந்த ஒரு மாதமாக கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. அதனால் பல காய்கறிகளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. முகூர்த்த நாட்கள் தொடங்கியுள்ளதால், அதிக அளவில் காய்கறி கள் விற்பனையாகி வந்தாலும், விலை வீழ்ச்சியால் வியாபாரி களுக்கு குறிப்பிடும்படியாக லாபம் கிடைக்கவில்லை” என்றார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author