போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: முதல்வர் குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் விளக்கம்

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: முதல்வர் குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் விளக்கம்
Updated on
1 min read

போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஒருதலைபட்சமாக அறிவிக்கை வெளியிட்டிருப்பது வருத்தமளிக்கிறது என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ள நிலையில், "அமைச்சர்கள் பேசுவதை விட நீங்கள் அவர்களை அழைத்துப் பேசினால் இன்னும் சிறப்பாக இருக்கும், ஏன் பேச மறுக்கிறீர்கள்", என்ற கருத்தை வலியுறுத்தினேன். அதை மூடி மறைக்க வேண்டும் என்பதற்காக, ஒருவேளை முதலமைச்சர் இந்தக் கருத்தை தெரிவித்து இருக்கலாம் என ஸ்டாலின் விளக்கமளித்திருக்கிறார்.

நேற்று முதலமைச்சருடன் தொலைபேசியில் பேசிய பிறகு ஒருதலைப்பட்சமாக அறிக்கை வெளியிட்டு இருப்பதாக முதலமைச்சர் இப்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறாரே? என்ற கேள்விக்கு, "முதலமைச்சர் தன்னுடைய கருத்தை வெளியிட்டு இருக்கலாம். நான் அவரிடம், “உடனடியாக போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்”, என்றபோது, அமைச்சர் தொடர்ந்து பேசி வருவதாக அவர் தெரிவித்தார்.

எனவே, "அமைச்சர்கள் பேசுவதை விட நீங்கள் அவர்களை அழைத்துப் பேசினால் இன்னும் சிறப்பாக இருக்கும், ஏன் பேச மறுக்கிறீர்கள்", என்ற கருத்தை வலியுறுத்தினேன். அதை மூடி மறைக்க வேண்டும் என்பதற்காக, ஒருவேளை முதலமைச்சர் இந்தக் கருத்தை தெரிவித்து இருக்கலாம்.

நான் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள எல்லா எதிர்க்கட்சிகளும் இதைத்தான் வலியுறுத்தி வருகிறார்கள். அதை உடனே அவர் செய்ய வேண்டும் என்பதுதான் எனது கருத்து" என ஸ்டாலின் பதிலளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in