Published : 27 Jan 2018 08:36 AM
Last Updated : 27 Jan 2018 08:36 AM

டாக்டர், செவிலியர், ஊழியர்களுக்கு சிறந்த சேவைக்காக பதக்கம்

சென்னை அரசு மருத்துவ மனைகளில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. சிறந்த சேவைக்காக டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடியரசு தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. டீன் பொன்னம்பல நமச் சிவாயம் தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் சிறந்த சேவைக்காக பொது மருத்துவத் துறைத் தலைவர் முத்துசெல்வம், பொது அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் ராஜேந்திரன், நோய் தடுப்பு குறியியல் துறைத் தலைவர் அருண் முத்துகுமார் உள்ளிட்ட டாக்டர்கள், செவிலியர் கண் காணிப்பாளர் பி.உமாதேவி மற்றும் ஊழியர்கள், அமைச்சுப் பணியாளர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆர்எம்ஓ ரமேஷ், மருத்துவ துணைக் கண் காணிப்பாளர் அருணன், டாக்டர்கள், செவிலியர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை அரசு மருத்துவ மனையில் டீன் ஆர்.ஜெயந்தி தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் சிறந்த சேவைக்காக டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார். அப்போது மருத்துவக் கண் காணிப்பாளர் நாராயணபாபு, ஆர்எம்ஓ இளங்கோ ஆகியோர் உடன் இருந்தனர்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் டீன் வசந்தாமணி தேசியக் கொடியை ஏற்றினார். சிறந்த சேவைக்காக டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர் களுக்கு பதக்கங்களை வழங்கினார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x