

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டிசென்னை, கோவை, பெங்களூருஉள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்வேலை, படிப்பு நிமித்தமாக தங்கியிருக்கும் லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்குப் பயணிப்பர். அவர்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்குவது வழக்கம்.
இது தொடர்பாக ஆண்டுதோறும் போக்குவரத்துத் துறைஅமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். கடந்தஆண்டு நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு தீபாவளிக்காக சென்னையிலிருந்தும் பிற பகுதிகளில் இருந்தும் சேர்த்துமொத்தமாக 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டன.
அந்த வகையில், இந்த ஆண்டுதீபாவளியை ஒட்டி, சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி, சிறப்புச் செயலாளர் தி.ந.வெங்கடேஷ், ஆணையர் சண்முகசுந்தரம், காவல் துறை உயர் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் பங்கேற்கவுள்ளனர்.
கூட்டத்துக்குப் பிறகு சிறப்புப் பேருந்துகள் தொடர்பான அறிவிப்பை அமைச்சர் வெளியிடுவார் என துறை சார் அதிகாரிகள் தெரிவித்தனர்.