Published : 28 Oct 2023 06:30 AM
Last Updated : 28 Oct 2023 06:30 AM
சிவகங்கை: ‘தமிழக ஆளுநர் தனது வேலையை மட்டும் பார்த்திருந்தால், பெட்ரோல் குண்டுவீச்சு போன்ற பிரச்சினை வந்திருக்காது’ என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மருதுசகோதரர்கள் குரு பூஜையையொட்டி காளையார் கோவிலில் உள்ள அவரது நினைவிடத்தில் சீமான் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசியதற்கெல் லாம் ஆட்சியை கலைக்க வாய்ப்பு இல்லை. குண்டு எறிந்தவனுக்கும், திமுகவுக்கும் தொடர்பு இல்லை. ஆளுநர் அரசியல், அவதூறு பேசியதால் வெறுப்பாகிப் போனவர் குண்டு வீசியிருக்கலாம்.
ஆளுநர் தனது வேலையை மட்டும் பார்த்திருந்தால் இது போன்ற பிரச்சினை வந்திருக்காது. பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்தபோது கூட நான் போகவில்லை.
அதேபோல், கமல்ஹாசன் கட்சியுடன் சேர மாட்டேன். நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாற்றை தமிழக ஆட்சியாளர்கள் மறைப்பதாக, ஆளுநர் கூறியதை வரவேற்கிறேன். அதேசமயத்தில் அதை சொல்ல தகுதி வேண்டும். இரண்டு மாதத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில் நீட் தேர்வை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துவது என்பது சிரிப்புதான் வருகிறது. எதிர்க் கட்சியாக இருக்கும்போது புதிய கல்வி கொள்கையை ஏற்காத திமுகவினர், ஆளும் கட்சியானவுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதன் வெளிப்பாடுதான் இல்லம்தோறும் கல்வித் திட்டம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT