Published : 27 Oct 2023 04:31 PM
Last Updated : 27 Oct 2023 04:31 PM

நெல்லை பேருந்து நிலைய அவலம்: மக்களின் வரிப்பணத்தை வீணடித்தது யார்?

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பாளையங்கோட்டை பேருந்து நிலையம் மற்றும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட இருக்கைகள் சேதமடைந்து கிடக்கின்றன. | படங்கள்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி: திருநெல்வேலி வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையம், பாளையங்கோட்டை பேருந்து நிலையங்களில் உள்ள தரமற்ற இருக்கைகளால் பயணிகள் அவதியுறுவது குறித்து ‘இந்து தமிழ்’ உங்கள்குரல் பகுதியில் வாசகர் ஒருவர் புகார் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டிதிட்டத்தில் வேய்ந்தான்குளம் புதியபேருந்து நிலையம் மற்றும் பாளையங்கோட்டை பேருந்து நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டில்உள்ளன. புதிய பேருந்து நிலையத்தில்நடைமேடைகளை ஆக்கிரமிப்பு செய்துகடைகளை அமைத்துள்ளது, சகிக்கமுடியாத அளவுக்கு துர்நாற்றம்,பேருந்து நிலையத்தின் வெளிப்புறம் சுற்றுச்சுவரையொட்டிய பகுதிகளை திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றியிருப்பது, கழிவு நீரோடைகளில் கழிவுகள் தேங்கிசுகாதார சீர்கேடு, பேருந்து நிலைய தரைத்தளத்தில் மழைநீர் தேங்கி வழுக்கிவிழும் பயணிகளின் வேதனை என பல்வேறு பிரச்சினைகள் வரிசை கட்டியிருக்கின்றன.

இங்கு அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் வளைந்தும், நெளிந்தும், உடைந்தும் சேதமடைந்தும் உள்ளன. பேருந்து நிலையம் புதுப்பித்து திறக்கப்பட்டு ஓரிரு ஆண்டுகளே கடந்துள்ள நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட இருக்கைகள் பலவும் சேதமடைந்திருப்பது அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. தரமற்ற இருக்கைகளை அமைத்துள்ளதால் பயணிகள் அவற்றில் அமர முடியாமல் தவிக்கிறார்கள்.

இதே நிலைதான் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்திலும் காணப்படுகிறது. இங்கும் பேருந்து நிலையத்தினுள் இருக்கைகள் சேதமடைந்துள்ளன. பல கோடிரூபாய் செலவிட்டு அமைத்துள்ள பேருந்துநிலையத்தில் தரமற்ற இருக்கைகளைமாற்றி புதிய இருக்கைகளை அமைக்கவும், தரமற்ற இருக்கைகளை அமைத்துமக்களின் வரிப்பணத்தை வீணடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் கவனிக்குமா?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x