விஜயசேகர்
தமிழகம்
சொத்து குவிப்பு வழக்கு: தீயணைப்பு கூடுதல் இயக்குநர் சஸ்பெண்ட்
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதியப்பட்டிருந்த நிலையில் தீயணைப்புத்துறை கூடுதல் இயக்குநர் விஜயசேகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தீயணைப்புத்துறை கூடுதல் இயக்குநராக (செயலாக்கம் மற்றும் பயிற்சி) பணியில் இருந்தவர் விஜயசேகர் (59). இவர் இணை இயக்குநராக இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.24.53 லட்சம் (63.66 சதவீதம்) சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக கோவை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் 2020-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான விஜயசேகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் விரைவில் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
