Published : 27 Oct 2023 06:27 AM
Last Updated : 27 Oct 2023 06:27 AM

சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் நவ. 1 முதல் 4 சக்கர வாகன நிறுத்தம் மூடல்

சென்னை: சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் நான்கு சக்கர வாகன நிறுத்தம் நவ.1-ம் தேதி முதல் 2 மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்படவுள்ளது. சென்னையில், இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

இதற்கு ஏற்ப அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பாக, முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தம் மேம்படுத்தப்படுகிறது. அந்த வகையில், சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் நான்கு சக்கர வாகன நிறுத்தம் புதுப்பிக்கப்பட உள்ளது. இதற்காக, இந்த வாகன நிறுத்தும் பகுதி 2 மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறபட்டுள்ளதாவது: பயணிகளின் வசதி மற்றும் சீரான வாகன நிறுத்த மேம்பாட்டை கருத்தில் கொண்டு, சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் நான்கு சக்கர வாகன நிறுத்தும் பகுதி புதுப்பிக்கப்பட உள்ளது.

இதன் காரணமாக, நான்கு சக்கர வாகன நிறுத்தம் நவ.1-ம் தேதி முதல் 2 மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்படவுள்ளது. பயணிகள் அருகிலுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x