Published : 27 Oct 2023 06:18 AM
Last Updated : 27 Oct 2023 06:18 AM
சென்னை: சென்னை மாநகராட்சி எல்லைக்குஉட்பட்ட பகுதிகளில், அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் சென்னைஉயர்நீதிமன்ற ஆணைப்படி அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த செப்.21முதல் அக்.25-ம் தேதிவரை பொதுஇடங்கள் மற்றும் தனியார் கட்டிடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட203 விளம்பரப் பலகைகள் மற்றும்கடைகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட 44 விளம்பர பலகைகள் என மொத்தம் 247 விளம்பரப்பலகைகள் மாநகராட்சியால் அகற்றப்பட்டுள்ளன.
கட்டிட உரிமையாளர்கள், தங்களுக்கு சொந்தமான கட்டிடத்தில் விளம்பரப் பலகைகள் அமைக்க விளம்பர நிறுவனங்கள் விளம்பரம் மேற்கொள்ள அனுமதிக்கும் பட்சத்தில், அவ்விளம்பர நிறுவனங்கள் அவ்விடத்தில் விளம்பரம் செய்ய மாநகராட்சியிடம் உரிமம்பெற்றிருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
அவ்வாறு உரிமம் இல்லாமல் விளம்பரப் பலகை அமைக்ககட்டிடத்தின் உரிமையாளர் அனுமதிக்கும் பட்சத்தில், மாநகராட்சியால் கட்டிடத்தின் உரிமையாளர் மீது சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் இயற்கை பேரிடர் அபாயத்திலிருந்து பொதுமக்களின் நலன் கருதி, அனுமதி இல்லாமல் தனியார் கட்டிடங்களில் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தால் அக்கட்டிடத்தின் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் அகற்ற அறிவுறுத்த வேண்டும்.
இதில் தாமதமோ, சுணக்கமோ ஏற்படுமாயின்அதனால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு சம்மந்தப்பட்ட விளம்பர நிறுவனங்கள் மற்றும் கட்டிடத்தின் உரிமையாளர்களும் முழு பொறுப்பாவார்கள். சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT