

மதுரை: மதுரை மாவட்டத்தில் இன்று (அக்.27) முதல் 3 நாட்கள் அரசு டாஸ்மாக் கடைகளில் விற்பனை நடக்காது என, ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று நடைபெறும் மருது பாண்டியர் நினைவு தினம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பசும் பொன்னில் அக்.29 மற்றும் 30-ம் தேதி நடைபெறும் முத்து ராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழாவையும் முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை நிலை நாட்டும் வகையில், அக்.27, 28 மற்றும் 30 ஆகிய 3 நாட்கள் அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள், மனமகிழ் மன்றங்கள் உள்ளிட்டவற்றில் மது விற்பனை நடக்காது.
மேலும், தங்கும் விடுதியுடன் கூடிய மது அருந்தும் இடங்கள், படை வீரர் கேன்டீன் மற்றும் அயல் நாட்டு சில்லறை விற்பனைக் கடைகளும் மூடப்பட்டிருக்கும். இந்த நாட்களில் விதிமுறை மீறி மது விற்பனை எதுவும் நடைபெறாமல் கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்யப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.