Published : 26 Oct 2023 06:01 AM
Last Updated : 26 Oct 2023 06:01 AM

கபாலீஸ்வரர் கோயில் நிதியில் கலாச்சார மையம் அமைக்க கூடாது: அண்ணாமலை எதிர்ப்பு

சென்னை: கபாலீஸ்வரர் கோயில் நிதியில்கலாச்சார மையம் அமைப்பதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனதுட்விட்டர் பதிவில் கூறியிருப்ப தாவது: சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில், கோயில் நிதியின் மூலம்சென்னையில் கலாச்சார மையம் கட்டும் முயற்சியில், இந்து சமய அறநிலையத் துறை ஈடுபடப் போவதாக ஒப்பந்தம் கோரியிருக்கிறது.

கோயில் நிதியை கோயில் தொடர்பான பணிகளுக்கே பயன்படுத்த வேண்டும் என்று சட்டமே இருக்கும்போது, கோயில் நிதியையும், நிலத்தையும் ஆக்கிரமித்து, கலாச்சார மையம் அமைக்கும் உரிமையை திமுக அரசுக்கு யார் தந்தது?

கோயிலுக்கான மூலதன நிதியைஎதற்கும் எடுக்கக் கூடாது. அர்ச்சகர், பணியாளர் பயிற்சி, பக்தர்களுக்கான அடிப்படை வசதி செய்துகொடுப்பது உள்ளிட்ட சில விஷயங்களுக்கு மட்டுமே மூலதன நிதி போக மீதமுள்ள வருமானத்தைப் பயன்படுத்த வேண்டும்.

அதுபோக மீதி இருக்கும் உபரி நிதியைத்தான் வேத, ஆகம பாடசாலைகள், ஆதரவற்றோர் இல்லம், இந்து சமய மேம்பாட்டு பள்ளி, கல்லூரிகள் அமைத்தல், நலிந்த கோயில்கள் புனரமைப்பு, மருத்துவமனை அமைத்தல் உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று இந்து அறநிலைய சட்டப் பிரிவுகள் 36 மற்றும் 66 தெளிவாகக் கூறுகின்றன.

உபரி நிதியை, வணிகப் பயன்பாட்டுக் கட்டிடங்கள் உள்ளிட்டவை கட்டப் பயன்படுத்தக் கூடாது என்றுசட்டத்தில் தெளிவாக இருக்கும்போது, சட்டத்தை மீறி இந்து சமயஅறநிலையத் துறை செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியை எடுத்து, கோயில் நிலத்தில் கலாச்சார மையம் அமைக்கும் முறைகேட்டை திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், தமிழக பாஜக சார்பாக மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x