சிறப்பாக செயல்படும் தமிழக அரசு குறித்து குறைகூறுவதா? - பழனிசாமிக்கு டிகேஎஸ் இளங்கோவன் கண்டனம்

சிறப்பாக செயல்படும் தமிழக அரசு குறித்து குறைகூறுவதா? - பழனிசாமிக்கு டிகேஎஸ் இளங்கோவன் கண்டனம்
Updated on
1 min read

சென்னை: ஆரியம், திராவிடம் என ஆளுநர் பேசியதை கேட்டபோது புராணம் படிக்கவில்லை என்று கூறிய பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின் குறித்து குறைகூறுவதா? என்று திமுகவின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மூன்றாண்டுகள் முதல்வர் பதவியில் இருந்து மக்களைப் பற்றி கவலைப்படாமல், தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் வளமாக்கிக் கொண்ட பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மத்திய பாஜக அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பு, சிஏஏ சட்டம் என மாநில அரசுகளின் அதிகாரத்தை பறித்தும், சிறுபான்மை இன மக்களை அங்கீகரிக்க மறுத்தும் சட்டங்களை நிறைவேற்றியபோது, பாஜக அரசை ஆதரித்தார். அவர் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலினை குறைகூறுகிறார்.

திமுக ஆட்சிக்காலங்களில், தமிழகவளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின்முன்னேற்றத்துக்காகவும், நிறைவேற்றிய திட்டங்களை மறைத்துவிட்டு, தான் செய்ததாக கூறிவரும் பழனிசாமியை, மக்கள் ஏற்கெனவே ஆட்சியில் இருந்துதூக்கி எறிந்துவிட்டனர். இதை புரிந்து கொள்ளாமல் அறிக்கை விட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் நிதி மேலாண்மையை சரியாககையாளாமல் ரூ.5.7 லட்சம் கோடி கடனில் விட்டுச்சென்ற பழனிசாமி அரசின்குறைகளை, சரி செய்வதையே சவாலாக ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு செய்து வருகிறது. திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில் உறுதியளித்த பல்வேறு திட்டங்களை சிறப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த பழனிசாமியிடம், ‘தமிழகத்தில் விடுதலைப் போரில் ஈடுபட்ட வர்களைப் பற்றி யாரும் கவலைப் படாமல், சாதிஅரசியல் நடத்துகிறார்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது குறித்து கேட்டனர். அதற்கு பழனிசாமி ‘‘நான் புராணங்களைப் படித்ததில்லை.

அறிஞர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள்’’ என்றுதன்னைப்பற்றி தெளிவாக விளக்கியுள்ளார். அவர், ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து நடத்தப்பட்ட விடுதலைப் போரை, மகாபாரதப் போர் என்று நினைத்துக் கொண்டு பேசியிருக்கிறார். அந்த போர் புராணக்கதைகளில் உள்ளது என்றும் கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in