Published : 26 Oct 2023 06:04 AM
Last Updated : 26 Oct 2023 06:04 AM

நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நவராத்திரி பூஜை கோலாகலம்: தமிழிசை, துர்கா ஸ்டாலின், ஓபிஎஸ் பங்கேற்பு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வீட்டில்நடந்த நவராத்திரி பூஜையில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், துர்கா ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் வீட்டில்நவராத்திரி சிறப்பு பூஜைஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நவராத்திரி சிறப்பு பூஜை சென்னைபோயஸ் கார்டனில் உள்ளஅவரது வீட்டில் சமீபத்தில்நடந்தது. பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரஜினிகாந்தின் மனைவி லதா,மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் செய்திருந்தனர்.

பூஜையில் பங்கேற்குமாறு திரைத்துறையை சேர்ந்தவர்கள் உட்பட முக்கிய பிரபலங்களுக்கு முன்கூட்டியே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், சகோதரி செல்வி, நடிகர் விஜய் தாயார் ஷோபா சந்திரசேகர், நடிகைகள் மீனா,லதா உள்ளிட்டோர் பூஜையில் கலந்துகொண்டனர்.அதேபோல், முன்னாள்முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் பூஜையில் பங்கேற்றனர்.

அரசியல் மற்றும்திரை பிரபலங்கள் குவிந்ததால் ரஜினிகாந்த் வீடு விழாக்கோலம் பூண்டது. ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக வெளிமாநிலத்தில் இருப்பதால், அவர் பூஜையில் பங்கேற்கவில்லை. ரஜினிகாந்தின் மனைவி, மகள்கள், பேரன்கள் பூஜைக்கு வந்தவர்களை வரவேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x