

கோவை: பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் அரசையும், அதற்கு ஆதரவு வழங்கி வரும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசுகளை கண்டித்தும், பாலஸ்தீன மக்களுக்கான உரிமைகளை பெற்றுத் தரும் முயற்சிகளை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தியும்
கோவை மாவட்ட அனைத்து ஜமா அத்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பில், உக்கடத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் இனாயதுல்லாஹ், சுல்தான் அமீர், சாதிக் அலி ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில், ஜமா அத்துல் உலமா சபையின் மாநில துணைச் செயலாளர் மெளலவி இல்யாஸ் ரியாஜி, டபிள்யு.பி.ஐ மாநில தலைவர் கே.எஸ்.அப்துர் ரஹ்மான், எஸ்.டி.பி.ஐ மாநில செயலாளர் ராஜா உசேன், த.மு.மு.க மாநில பேச்சாளர் ரெக்ஸ் ரஃபி, ஜாக் மாவட்ட தலைவர் ஐ.அனீஃபா ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.