அமமுக செயற்குழு கூட்டத்தின் தேதி அறிவிப்பு

டிடிவி தினகரன் | கோப்புப் படம்
டிடிவி தினகரன் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் வருகின்ற நவம்பர் 4ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவிப்பில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மக்கள் நலக்கொள்கைகளைத் தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் கழகத் தலைவர் C.கோபால் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமையில் வருகிற 04.11.2023 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் திருச்சி, ஃபெமினா ஹோட்டலில் உள்ள காவேரி ஹாலில் நடைபெற உள்ளது. கழக செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in