

தற்காலிக ஓட்டுநர்களை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற சோதனை ஓட்டத்தின்போது, தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து பள்ளத்தில் இறங்கியது. இதில் யாரும் காயமின்றி தப்பினர்.
பேருந்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக அரசு பேருந்துகளை இயக்குவதற்காக கமுதி, முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளில் தற்காலிக ஓட்டுநரை தேர்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. தேர்வுக்காக வந்தவர்களிடம் பேருந்தை ஓட்டச் செய்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது தற்காலிக ஓட்டுநர்கள் பலர் பேருந்தில் அமர்ந்திருந்தனர். முதுகுளத்தூர் அருகே பாக்குவெட்டி கிராமம் அருகே பேருந்து சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்து பள்ளத்தில் இறங்கியது. உடன் பிரேக் போட்டதால் பனை மரத்தில் மோதுவது தவிர்க்கப்பட்டது.