ஆயுத பூஜை | தோவாளை மலர் சந்தையில் 300 டன் பூக்கள் அதிகமாக விற்பனை; விலை அதிகரித்தாலும் மக்கள் ஆர்வம்

300 டன் பூக்கள் அதிகமாக விற்பனை
300 டன் பூக்கள் அதிகமாக விற்பனை
Updated on
1 min read

கன்னியாகுமரி: தோவாளை மலர் சந்தையில் ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று பூக்கள் விலை அதிகரித்திருந்தது. வழக்கத்தைவிட 300 டன் பூக்கள் அதிகமாக விற்பனை ஆனது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கியத்துவம் பெற்ற தோவாளை மலர் சந்தை உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, மற்றும் வெளிநாடுகளுக்கு பூக்கள் விநியோகம் செய்யப்படுகிறது. ஆயுதபூஜை, மற்றும் விஜயதசமி தேவைக்காக இன்று தோவாளை மலர் சந்தையில் பூக்கள் அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.

குமரி மாவட்டம் மட்டுமின்றி ராதாபுரம், வள்ளியூர், நாங்குனேரி உட்பட திருநெல்வேலி மாவட்டம், மற்றும் திண்டுக்கல், மதுரை, சத்தியமங்கலம், உதகை, ஓசூர், பெங்களூர் போன்ற பகுதிகளில் இரு்து பூக்கள் வழக்கத்தைவிட அதிக அளவில் வரவழக்கைப்பட்டிருநவ்தன. அதிகாலையிலே தோவாளை மலர் சந்தையில் கூடிய வியாபாரிகள், மற்றும் பொதுமக்கள் பூக்களை அதிக அளவில் கொள்முதல் செய்தனர்.

இதுவரை ரூ.750க்கு விற்ற ஒரு கிலோ பிச்சிப்பூ இன்று ரூ.900க்கு விற்பனை ஆனது. 800க்கு விற்ற மல்லிகை பூ ரூ.1000க்கு விற்கப்பட்டது. அரளி ரூ.500, ரோஜா 300, கனகாம்பரம் 500, கிரேந்தி 100, மஞ்சள் கிரேந்தி 120, மரிகொழு்து ரூ150க்கு விற்பனை ஆனது சரஸ்வதி பூஜைக்கு முக்கியத்துவம் வாய்ந்த தாமரை பூ ஒன்று ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை ஆனது. நேற்று ஒரே நாளில் ஆயுத பூஜை தேவைக்காக தோவாளை மலர் சந்தையில் வழக்கத்தைவிட 300 டன் பூக்கள் விற்பனை ஆனது. இதனால் பூ வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in