மதுரை ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை சார்பில் நீத்தார் நினைவு தின அஞ்சலி

மதுரை ஆயுதப்படை  மைதானத்தில் அஞ்சலி செலுத்திய தென் மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் உள்ளிட்டோர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் அஞ்சலி செலுத்திய தென் மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் உள்ளிட்டோர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
Updated on
1 min read

மதுரை: காவல்துறை சார்பில் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

பணியின் போது நாட்டுக்காக வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினரை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் அக்.21-ம் தேதி நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நேற்று காலை மதுரை மாநகர் ஆயுதப் படை மைதானத்தில் நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இதில் 2022 செப்.1 முதல் 2023 ஆக. 31-ம் தேதி வரை வீரமரணமடைந்த ராணுவம், காவல் துறையைச் சேர்ந்த 188 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தென் மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் தலைமையில் மதுரை சரக டிஐஜி ரம்யா பாரதி, மாநகர காவல் ஆணையர் ஜெ.லோக நாதன், மதுரை மாவட்ட எஸ்பி சிவபிரசாத் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மாநகர காவல் துணை ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீ ஸார் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in