உலக நாடுகளின் நன்மதிப்பை பிரதமர் மோடி பெற்றிருக்கிறார்: ஓபிஎஸ்

ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்
ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்
Updated on
1 min read

மதுரை: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வெள்ள பாதிப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது: ”வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். வெள்ள பாதிப்பு வந்தால் அதற்குரிய நிவாரணங்களை தமிழக அரசு உரிய முறையில் வழங்க வேண்டும்.

உலக நாடுகளின் நன்மதிப்பை பிரதமர் மோடி பெற்றிருக்கிறார். இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே உள்ள பிரச்சினையை ஐ.நா. சபை மூலம் தீர்ப்பதற்கு பிரதமர் மோடி முயற்சி எடுக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in