Published : 21 Oct 2023 07:30 AM
Last Updated : 21 Oct 2023 07:30 AM

ஆவடி, சூளூர்பேட்டை, நெல்லூருக்கு இயக்கப்படும் மின் ரயில் சேவை 2 நாட்களுக்கு ரத்து

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக, ஆவடி, சூளூர்பேட்டை, நெல்லூருக்கு இயக்கப்படும் சில மின்சார ரயில் சேவைகள் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள சூளூர்பேட்டை-தடா இடையே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இவ்வழியாக இயக்கப்படும் சில புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, சென்னை சென்ட்ரல்-சூளூர்பேட்டை இடையே காலை 5.20, 7.45 மணி, சூளூர்பேட்டை-நெல்லூர் இடையே காலை 7.55, 10 மணி, நெல்லூர்-சூளூர்பேட்டை இடையே காலை 10.20, மாலை 4.15 மணி, சூளூர்பேட்டை-சென்னை சென்ட்ரல் இடையே மதியம் 12.35, மாலை 6.40 மணி, ஆவடி-சென்னை சென்ட்ரல் இடையே அதிகாலை 4.25, 6.40 மணி, சென்னை சென்ட்ரல்-ஆவடி இடையே இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் சேவைகள் இன்றும் (21-ம் தேதி), வரும் 24-ம் தேதியும் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோல், சென்னை சென்ட்ரல்-சூளூர்பேட்டை இடையே காலை 7.30, 8.35, 10.15 மணி, சென்னை கடற்கரை-சூளூர்பேட்டை இடையே மதியம் 12.40, சூளூர்பேட்டை - சென்னை சென்ட்ரல் இடையே மதியம் 1.20, 3.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் சேவைகள் இன்றும், 24-ம் தேதியும் சூளூர்பேட்டை-ஏலாவூர் இடையேயும், சூளூர்பேட்டை-சென்னை சென்ட்ரல் இடையே காலை 10, 11.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் சேவைகள் இன்றும், 24-ம் தேதியும் சூளூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையேயும் ரத்து செய்யப்படும். தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் இ்வ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x