Published : 21 Jan 2018 07:22 AM
Last Updated : 21 Jan 2018 07:22 AM

குடியரசு தின விழா மற்றும் ஒத்திகை நிகழ்ச்சிக்காக மெரினா காமராஜர் சாலையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

குடியரசு தின விழா ஒத்திகை மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சியைத் தொடர்ந்து மெரினா காமராஜர் சாலையில் 4 நாட்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குடியரசு தின விழா கொண்டாட்டம் வரும் 26-ம் தேதி மெரினா காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு வரும் 26 மற்றும் ஒத்திகை நாட்களான 22 மற்றும் 24-ம் தேதிகளில் காமராஜர் சாலையிலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 6 முதல் 10 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி காமராஜர் சாலையில், கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் 10 மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

மாற்றுப் பாதை

அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கிச் செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரின்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே.மடம் சாலை, வி.கே. ஐயர் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ் சந்திப்பு, லஸ் சர்ச் சாலை, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை, நீலகிரி சந்திப்பு, மியூசிக் அகாடமி, ராயப்பேட்டை மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஒயிட்ஸ் சாலை, ஸ்மித் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கிச் செல்லும் பிற வாகனங்கள், (மாநகர பேருந்துகள் உட்பட) சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் கச்சேரி சாலை சந்திப்பில் கச்சேரி சாலை நோக்கி திருப்பப்படும். அவை கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை, நீலகிரி சந்திப்பு, மியூசிக் அகாடமி, ராயப்பேட்டை மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஸ்மித் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

பேருந்து நிறுத்தம்

அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக வாலாஜா சாலை விருந்தினர் மாளிகை அருகில் மாற்றப்படும். பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கபாதையில் திருப்பி விடப்பட்டு ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக வாலாஜா பாயிண்ட், அண்ணா சாலை, அண்ணா சிலை, ஒயிட்ஸ் ரோடு, அண்ணா சாலை, அமெரிக்க தூதரகம் சர்வீஸ் ரோடு, கதீட்ரல் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, காரணீஸ்வரர் பகோடா தெரு, சாந்தோம் சாலை வழியாக அடையாறு சென்றடையலாம்.

வாலாஜா பாயிண்ட் மற்றும் அண்ணா சாலை சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் வர அனுமதியில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x