Published : 20 Oct 2023 06:04 AM
Last Updated : 20 Oct 2023 06:04 AM
சென்னை: வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து, சென்னையில் மருந்து, ரசாயன பொருட்களை உற்பத்தி, இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தொடர்புடைய 30 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 18-ம் தேதி சோதனை நடத்தினர்.
கவர்லால் குழுமத்தின்கீழ் செயல்படும் காவ்மன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்புடைய இடங்கள், மாதவரத்தில் உள்ள மனிஷ் குளோபல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கிடங்கு,ஆதிஸ்வரர் எக்ஸ்பியன் என்ற நிறுவனத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனைநடத்தினர்.
சென்னை ஆயிரம்விளக்கு, எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ஸ்கோப் இன்கிரிடியன்ட்ஸ் நிறுவனம் உட்பட 5 நிறுவனங்கள் தொடர்புடைய 30 இடங்களில் சோதனை நடந்தது.
இந்நிலையில், அந்த நிறுவனங் களுக்கு சொந்தமான இடங்களில் 2-வதுநாளாக நேற்றும் வருமான வரி அதிகாரிகள் சோதனையை தொடர்ந்தனர். இதில், வெளிநாட்டு முதலீடு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. சோதனை முழுமையாக முடிந்த பிறகு, இதுபற்றிய விவரங்கள் வெளியிடப்படும் என்று வருமான வரித் துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT