தொடர் விடுமுறை காரணமாக இன்றும், நாளையும் மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு

தொடர் விடுமுறை காரணமாக இன்றும், நாளையும் மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு
Updated on
1 min read

சென்னை: தொடர் விடுமுறை காரணமாக, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, இன்றும் (அக்.20), நாளையும் (அக்.21) இரவு 8 மணி முதல் 10 மணி வரை 6 நிமிடத்துக்கு ஒரு ரயில் சேவை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னையில் விமானநிலையம் - விம்கோநகர் வரையும், பரங்கிமலை - சென்ட்ரல் வரையும் ஆகிய இரு வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி 2.50 லட்சம் பேர் முதல் 2.80லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். பயணிகள் தேவைக்கு ஏற்ப ரயில் சேவை அதிகரிக்கப்படுகிறது.

அந்த வகையில், தொடர் விடுமுறையைமுன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, இன்றும்,நாளையும் இரவு 8 மணி முதல் 10 மணிவரை 6 நிமிடத்துக்கு ஒரு ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆயுத பூஜை (அக்.23), சரஸ்வதி பூஜை (அக்.24) என தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, வரும் வெள்ளிக்கிழமை (அக்.20), சனிக்கிழமை (அக்.21) ஆகிய நாட்களில் இரவு 8 மணி முதல் இரவு 10 மணிவரை கூடுதல் சேவை வழங்கப்பட உள்ளது.

அதாவது, இரவு 8 மணி முதல் 10 மணிவரை மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டுவழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்குபதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசல் மற்றும்சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in