உறுப்பு தானம் செய்வதற்கு ஆன்லைனில் உறுதிமொழி: மாணவர்கள் பங்கேற்க யுஜிசி அழைப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: ஆன்லைனில் உறுப்பு தான உறுதிமொழி அளிக்க வசதி உள்ளது. இதுகுறித்து உயர்கல்வி நிறுவனங்கள் பிரச்சாரம் செய்து, மாணவர்களை அதிக அளவில் பங்கேற்க செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் யுஜிசி செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் இந்திய உறுப்பு தான தினத்தை கொண்டாடும் வகையில், தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பை மத்திய அரசு நிறுவியுள்ளது.

இதையொட்டி, நாடு முழுவதும் ‘சேவா பக்வாடா’ எனப்படும் ஆன்லைனில் உறுப்புதான உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் பதிவேடு தொடங்கப்பட்டுள்ளது.

https://notto.abdm.gov.in/Dledge-registrv என்ற இணையதளத்தில் இந்த பதிவேடு உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் உறுப்பு தான உறுதிமொழியை இதில் பதிவு செய்யலாம். தேசியஉறுப்பு, திசு மாற்று அமைப்பின் இணையதளம் (www.notto.mohfw.gov.in) மூலமாகவும் உறுதிமொழியை பதிவு செய்யலாம்.

உறுதிமொழி பதிவு செய்வதற்கான செயல்முறை, உறுப்பு தானம் தொடர்பான தகவல்களை வழங்க 1800114770 என்ற கட்டணமில்லா உதவி எண்ணும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் உறுப்பு தான உறுதிமொழி அளிக்க முடியும் என்ற தகவலை உயர்கல்வி நிறுவனங்கள் சிறப்பு பிரச்சாரம் மூலம் மாணவர்களிடம் பரப்பி, அவர்களை அதில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in