Published : 19 Oct 2023 04:04 AM
Last Updated : 19 Oct 2023 04:04 AM
மதுரை: மதுரை மாநகராட்சியில் 3 வார்டுகளுக்கு கூட ஒரு உதவிப் பொறியாளர் இல்லாததால் ரூ.3,000 கோடிக்கு மேல் நடக்கும் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம், அம்ரூத் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், புதிய சாலை திட்டம் போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்கள் விரைவாக நடக்காமல் ஸ்தம்பித்துள்ளன.
மதுரை மாநகராட்சியில் சிறப்பு திட்டங்கள் முதல் கட்டிடங்கள் கட்டுவது, சாலைகள், பாலங்கள் அமைப்பது, குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை போன்ற பணிகளை பொறியியல் துறை அதி காரிகள் மேற்கொள்கிறார்கள். இத்துறையில் தலைமைப் பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், செயற் பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் பணிபுரிகிறார்கள்.
இவர்களுக்கு கீழ் தொழில் நுட்ப உதவியாளர்கள் பணிபுரிகிறார்கள். இந்த துறை மாநகராட்சியின் அச் சாணி போன்றது. பொறியியல் துறை அதிகாரிகள் பணியில் சிறிய தேக்கம் ஏற்பட்டால் கூட மாநகராட்சியின் ஒட்டுமொத்த பணிகளும் பாதிக்கப்படும். ஆனால், மதுரை மாநகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக பொறியியல் துறையில் தொழில் நுட்ப பணியாளர்கள் முதல் செயற் பொறியாளர்கள் வரை 50 சதவீதத்துக்கு மேல் நிரப்பப்படாமல் உள் ளன.
மாநகராட்சியில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், புதிய சாலை கள், ஸ்மார்ட் சிட்டி திட்டம், பாலங்கள் மற்றும் கட்டிடங்கள் கட்டுவது போன்ற ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் சிறப்பு திட்டங்கள் நடக்கின்றன. இந்தச் சூழலில் பொறியியல் துறையில் அதிகாரிகள் இட மாற்றம், புதிய அதிகாரிகள் நிய மனம் இல்லாதது,
காலி பணியிடங்களை நிரப்பாதது போன்ற நிர்வாக குளறுபடிகளால் சிறப்பு திட்டங்கள் மட்டுமில்லாது, அன்றாட பொறியியல் துறை பணி களும் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டுமானப் பணி, சாலைப் பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் இன்றி பணிகள் தரமில்லாமல் நடக்கின்றன. ஒப்பந்ததாரர்கள் பணிகளை ஏனோதானோவென முடிக்கிறார்கள்.
ஆளும்கட்சி முக்கிய புள்ளிகள் பின்னணியில் ஒப்பந்ததாரர்கள் பணிகளை எடுத்து செய்வதால் பணிகளை தரமின்றி செய்தாலும், அவர்களை யாரும் கண்டிக்க முடியாத சூழல் உள்ளது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிகாரம் குறைப்பால், அவரது ஆதரவாளரான மேயர் இந்திராணியை உள்ளூர் ஆளுங் கட்சி முக்கிய புள்ளிகள் சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை. அதனால், மாநகராட்சி பொறியியல் துறை, பொறுப்பு அதிகாரி களால் பணிகள் சரியாக நடப் பதில்லை.
இது குறித்து ஓய்வுபெற்ற பொறியியல் துறை அதிகாரிகள் கூறிய தாவது: சிறப்பு திட்டங்கள், கட்டுமானம், சாலைப் பணிகள் தொலை நோக்கு பார்வையுடன் நடக்க வேண்டும். தமிழகத்திலேயே அதிகமான சிறப்புத் திட்டங்கள் நடக்கும் மாநகராட்சியாக மதுரை உள்ளது. ஆனால், அன்றாட நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவே பொறியியல் துறையில் பணியாளர்கள் இல்லை. செயற் பொறியாளர்கள் 5 பேர் பணிபுரிய வேண்டும். ஆனால், 2 பேர் மட்டுமே உள்ளனர்.
தற்போதுகூட உதவி செயற் பொறியாளர்கள் மனோகர், சேகர், இந்திராதேவி, முனீர் அகமது ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு பதில் புதிதாக யாரும் நியமிக்கப்படவில்லை. உதவிப்பொறியாளர் மஞ்சுளா, இளநிலை பொறியாளர்கள் ராஜசீலி, துர்காதேவி ஆகியோர் கடந்த ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு பதில் ஆட்கள் நிரப்பப்படவில்லை. மாநகராட்சியில் 2 வார்டுகளுக்கு ஒரு உதவி பொறியாளராவது இருக்க வேண்டும். ஆனால், 3 வார்டுகளுக்கு கூட ஒரு உதவிப் பொறியாளர் இல்லை. மொத்தம் 10 உதவிப்பொறி யாளர்கள் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள இடங்களுக்கு தகுதியில்லாத கீழ்நிலை பணியாளர்களை தற்காலிகமாக நியமித்துள்ளனர்.
அவர்கள் பணிகளை பொறுப் பின்றி கவனிப்பதால் அனைத்து பணிகளும் தொய்வடைந்து மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சாலைப் பணிகளும் மந்தமாக நடக்கின்றன. ஒப்பந்ததாரர்களை கண்காணிக்கவும் அதிகாரிகள் இல்லை. அதிகாரிகள் தேவையான அளவு இருந்தால் மட்டுமே ஆய்வு செய்து பணிகளை தரமாக செய்ய முடியும்.
கடந்த காலத்தில் மாநகர் பொறியாளராக சக்திவேல், நகர் பொறியாளராக பாக்கியராமன் ஆகியோர் இருந்த போது மாநகராட்சியில் தேவையான அளவு பொறியியல் துறை அதிகாரிகள் இருந்தனர். மேலும், பாதாள சாக்கடை திட்டப்பணிகள், குடிநீர் திட்டப்பணிகளுக்கு தேவைப்படும் போது குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்து அயல் பணியாக மாநகராட்சிக்கு ஆட்கள் வரவழைக்கப்பட்டனர்.
ஆனால், தற்போது மக்கள் தொகை அதிகரித்து, வருவாயும் ரூ.600 கோடிக்கு மேல் வருகிறது. ஆனால் பணிகளை தரமாக மேற்கொள்ள போதுமான பணியாளர்கள், கண்காணிக்க போது மான அதிகாரிகள் இல்லை. இப்பணியிடங்களை கேட்டு நிரப்பவும் யாரும் முன்வராததால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பொறியியல் துறையில் அதிகாரிகளும் வேலைப் பளுவால் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT