Published : 18 Oct 2023 06:10 AM
Last Updated : 18 Oct 2023 06:10 AM

மத்திய - மாநில அரசு இணைந்து பணியாற்றினால் முறைகேடுகளை தடுக்கலாம்: நாராயணன் திருப்பதி கருத்து

சென்னை: மத்திய மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால் நலத்திட்டங்களில் நிகழும் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என தமிழகபாஜக துணைத் தலைவர் நாராய ணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின்பல்வேறு திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. உர மானியம், விவசாயிகள் கவுரவ நிதி, நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டம் ஆகிய திட்டங்களை மாநில அரசுகள் பயனாளிகளை அடையாளம் கண்டு செயல்படுத்தும்போது, பல்வேறுமுறைகேடுகள் நடைபெறுவதால் போலி பயனாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

ரூ.18 ஆயிரம் கோடி: விவசாயிகள் கவுரவ நிதி திட்டத்தில் மட்டுமே பல்வேறு மாநிலங்களில் இதுவரை 1 கோடியே 71 லட்சம் போலி மற்றும் தகுதியில்லாதபயனாளிகள் இணைக்கப்பட்டுள் ளது கண்டுபிடிக்கப்பட்டு, தகுதியற்ற நபர்களுக்கு செல்லவிருந்தரூ.9,000 கோடி தடுக்கப்பட்டுள் ளது.

மத்திய அரசால் வழங்கப்படும் மானிய உரம் விவசாய தேவைகளுக்கு இல்லாமல், தவறாக தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படுவதை மத்திய அரசின் சோதனைக் குழுக்கள் கண்டுபிடித்துள்ளன. இதன்மூலம் இந்த ஆண்டுமட்டும் ரூ.5,000 கோடி சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல், நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்திலும் போலி பயனாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த நிதியாண்டில் ரூ.4,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று திட்டங்களில் மட்டும் ரூ.18,000 கோடிக்கான மக்கள் பணம் போலி பயனாளிகள் வசம் செல்லாமல் சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அரசுகள் மத்திய அரசோடு இணைந்து பணியாற்றுவதன் மூலம் மட்டுமே இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x