திருவாரூர் - காரைக்குடி இடையே அதிவிரைவு ரயில் 121 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம்

காரைக்குடிக்கு வந்த சோதனை ஓட்ட அதிவிரைவு ரயில்.
காரைக்குடிக்கு வந்த சோதனை ஓட்ட அதிவிரைவு ரயில்.
Updated on
1 min read

காரைக்குடி: திருவாரூர், காரைக்குடி இடையே 121 கி.மீ. வேகத்தில் அதி விரைவு ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

காரைக்குடி, திருவாரூர் வழியாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி, ராமேசுவரம் - செகந்திரா பாத், தாம்பரம் - செங்கோட்டை ஆகிய மூன்று வாராந்திர ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர மயிலாடுதுறை - காரைக்குடி பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் இந்த வழித்தடத்தில் 90 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக நேற்று தண்டவாள உறுதித் தன்மை, அதிர்வுகளை ஆய்வு செய்யும் ஓ.எம்.எஸ். அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த ரயில் 121 கி.மீ. வேகத்தில் திருவாரூர் - காரைக்குடி இயக்கப்பட்டது.

காரைக்குடியில் சோதனை ஓட்ட ரயிலை தொழில் வணிக கழகத் தலைவர் சாமி திராவிட மணி, ரோட்டரி சங்க முன்னாள் செயலாளர் லியாகத் அலி ஆகியோர் வரவேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in