Published : 17 Oct 2023 06:06 AM
Last Updated : 17 Oct 2023 06:06 AM

பொது கலந்தாய்வு மூலம் வந்த 182 ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் ஆணை: சென்னை மேயர் பிரியா வழங்கினார்

சென்னைள்: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பொது கலந்தாய்வு மூலம் அலகு விட்டு அலகு மாறுதலில் பணியிட மாறுதல் பெற்ற 182 ஆசிரியர்களுக்கு ஆணைகளை மேயர் ஆர்.பிரியா வழங்கினார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியின் கீழ் 209 தொடக்கப் பள்ளிகள், 130நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 420 பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 30 ஆயிரத்து 361 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 508 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மாதம் ஆசிரியர்களுக்கான பணி நிரவல் பணி நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 3-ம் தேதி பொது கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில் 85 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் பெற்றனர். தொடர்ந்து மாநகராட்சி முழுவதும் உள்ள 420 பள்ளிகளில் காலியாக உள்ள 336 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தகுதியான ஆசிரியர்கள் பங்குபெறும் வண்ணம் பொது கலந்தாய்வு நடைபெற்றது.

இதில் அலகு விட்டு அலகுமாறுதலில் பணியிட மாறுதல் பெற்றஇடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என 182 பேருக்கு ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகைவளாகத்தில் நேற்று நடைபெற்றது.அதில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பங்கேற்று பணி ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், துணை ஆணையர் (கல்வி) ஷரண்யா அறி, நிலைக் குழுத் தலைவர் (கல்வி) த.விசுவநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x