

சென்னை: தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியட்டுள்ளார்.
வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை செயலாளராக அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார். வணிக வரித்துறை ஆணையராக ஜெகன்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளராக சமயமூர்த்தி நியமனம். கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக கோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அச்சு மற்றும் எழுதுபொருள் துறை ஆணையராக சோபனா நியமிக்கப்பட்டுள்ளார். திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக ரமேஷ் சந்த் மீனா நியமனம். தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கவிதா ராமு நியமிக்கப்பட்டுள்ளார்.