Published : 03 Jan 2018 08:47 AM
Last Updated : 03 Jan 2018 08:47 AM

அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறி தனியார் கல்லூரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

குரோம்பேட்டையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் அடிப்படை வசதிகளை கேட்டு மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குரோம்பேட்டையில் தனியார் மகளிர் கல்லூரி உள்ளது. இங்கு காலை, மாலை என 4,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை எனவும் கட்டணம் அதிகமாக வசூலிப்பதாகவும் கூறி கல்லூரி வளாகத்தில் மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாணவிகள் கூறியதாவது: கல்லூரியில் தேவையான போதிய அடிப்படை வசதிகள் இல்லை. கழிவறையில் தண்ணீர் வருவது இல்லை, கழிவறை சுகாதாரம் இன்றி காணப்படுகிறது. கல்லூரி உணவகத்தில், உணவுகள் தரமாக இருப்பது இல்லை. போதிய வசதிகள் இன்றி உள்ள நிலையில் தேவையில்லாத கட்டணங்கள் அதிகமாக வசூலிக்கப்படுகிறது.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது முதல்கட்டமாக வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளோம். எங்கள் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் போராட்டம் தொடரும் என்றனர். இதனிடையே உரிய நடவடிக்கை எடுப்பதாக கல்லூரி நிர்வாகம் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x