Published : 15 Oct 2023 07:41 AM
Last Updated : 15 Oct 2023 07:41 AM
மேட்டூர்/தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 15,606 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 15,260 கன அடியாக சரிந்தது. எனினும், மாலையில் நீர்வரத்து18,633 கனஅடியாக உயர்ந்தது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்துஅதிகரித்துள்ளதால், அணையின்நீர்மட்டம் கடந்த 4 நாட்களாகஉயரத் தொடங்கியுள்ளது. அணை நீர்மட்டம் 39.63 அடி, நீர் இருப்பு 11.90 டிஎம்சியாக உள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன் தினம் காலை 6 மணிக்கு விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்தது. ஆனால், முற்பகலில் 13 ஆயிரம் கனஅடியாகவும், மாலையில் 14 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது. நேற்று காலை விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி என்ற நிலையில் நீர்வரத்து இருந்தது. ஆனால், நேற்று மாலையில் விநாடிக்கு 9,000 கனஅடியாக குறைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT