16-ம் தேதி வண்டலூர் பூங்கா திறந்திருக்கும்

16-ம் தேதி வண்டலூர் பூங்கா திறந்திருக்கும்
Updated on
1 min read

பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 16-ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்.

இதுதொடர்பாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

வண்டலூர் உயிரியல் பூங்காவில் செவ்வாய்க்கிழமைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக அன்றைய தினம் பூங்கா மூடப்படும். பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 16-ம் தேதி, காணும் பொங்கல் அன்று அதிக அளவில் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படு கிறது. அதனால் அன்று செவ்வாய்க்கிழமையாக இருப்பினும், பார்வையாளர் வசதிக்காக திறக்கப்படும். அன்று ஒரு மணி நேரம் முன்னதாக காலை 8 மணிக்கே பூங்கா திறக்கப்படும். ஏற்கெனவே நுழைவுச்சீட்டு வழங்க 20 கவுன்ட்டர்கள் செயல்பட்டு வருகின்றன. பார்வையாளர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் அன்று மேலும் 10 கவுன்ட்டர்கள் திறக்கப்பட உள்ளன.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in