காவிரி நீர் பிரச்சினை தொடர்பான சட்டப்பேரவை தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பு: அமைச்சர் துரைமுருகன் தகவல்

காவிரி நீர் பிரச்சினை தொடர்பான சட்டப்பேரவை தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பு: அமைச்சர் துரைமுருகன் தகவல்
Updated on
1 min read

சென்னை: காவிரி நீர் தொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் துரைமுருகன்தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்துக்கு காவிரியில் 3 ஆயிரம் கனஅடி நீர் தரவேண்டும்என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூறியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில், 16 ஆயிரம் கனஅடி நீர் தரவேண்டும் என்று வலியுறுத்துவோம். 8 நாட்களுக்கு தினசரி 3 ஆயிரம்கனஅடி நீர் தர வேண்டும் என்றுஏற்கெனவே அறிவுறுத்தப்பட்ட நிலையில், அவர்கள் 4,666 கனஅடிநீர் வழங்கினர்.

இதன்மூலம்நேற்றுவரை 4.21 டிஎம்சி நீர் வந்துள்ளது. இன்னும் நமக்கு 0.454 டிஎம்சி வரவேண்டும். காவிரி ஆணைய கூட்டத்தில் 16 ஆயிரம் கன அடி நீர் வழங்க வலியுறுத்துவோம். மேட்டூர் அணையை பொறுத்தவரை தற்போது 8 டிஎம்சி தண்ணீர்தான் உள்ளது. எனவே, குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் தரப்படும்.

காவிரி தொடர்பாக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு பயந்து கர்நாடகா தண்ணீர் தந்தாலும், அங்குள்ள மக்களுக்காக அவர்களும் நாடகமாட வேண்டியுள்ளது. இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in