Published : 12 Oct 2023 04:10 AM
Last Updated : 12 Oct 2023 04:10 AM

சந்திர பிரியங்கா குற்றச்சாட்டுகள் குறித்து நேர்மையான விசாரணை தேவை: மார்க்சிஸ்ட்

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வருக்கு உண்மையிலேயே பெண்களின் நலனில் அக்கறை இருக்குமேயானால் அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நேர்மை யான விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்ட அறிக்கை: என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு அதிகாரத்துக்கு வந்த பிறகு மக்கள் இதுவரை சந்திக்காத மிக மோசமான சம்பவங்களும், சட்ட விரோத செயல்களும் அரங்கேறி வருகிறது. கோயில் நிலம் திருடப்பட்ட வழக்கில் பாஜக எம்எல்ஏக்கள் குற்றவாளிகளாக இருப்பதும்;

முதல்வருக்கு நெருக்கமானவர்கள் மீது மிரட்டி பணம் பறிக்கும் புகார்கள் முன்வைக்கப் படுவதும்; கட்டப்பஞ்சாயத்து கூடாரமாக புதுச்சேரி சட்டமன்ற வளாகம் மாறிவிட்டதாக ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் பேரவைத் தலைவரைச் சந்தித்து புகார் மனு அளிப்பதும் நடந்து வருகிறது. தற்போது பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

சாதிய மற்றும் பாலின ரீதியான தாக்குதலுக்கு உள்ளானதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதோடு, பெரும்பான்மை மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம் என்று முதல்வரை அறிவுறுத்தியுள்ளார். கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ராஜினாமா செய்துள்ளார்.

பெண் அமைச்சர் ஒருவர் இனிமேல் தொடர்ந்து அமைச்சராக நீடிக்க முடியாத அளவுக்கு தனக்கு கொடுமை இழைக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கும் போது சாதாரண மக்களுக்கும் குறிப்பாக, பெண்களுக்கும் புதுச்சேரியில் என்ன பாதுகாப்பு இருக்கிறது? எனவே இவ்வளவு நாட்கள் மூடி மறைக்கப்பட்டு வந்த பல பிரச்சினைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

புதுச்சேரி சட்டமன்றத்தில் பெண்களின் பங்கேற்பு கடந்த காலத்திலும் குறைவானதாகவே இருந்து வருகிறது. தற்போது 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஒருவர் அமைச்சராக பொறுப்பில் இருந்த வரும் தனக்கு இழைக் கப்பட்ட அநீதியை தாங்கிக் கொள்ளாமல் பதவியில் இருந்து வெளியேறியுள்ளார்.

பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதாக என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு கூறுவது கபட நாடகம் ஆகும்.முதல்வருக்கு உண்மையிலேயே பெண்களின் நலனில் அக்கறை இருக்குமேயானால் அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நேர்மையான விசாரணை நடத்தி புதுச்சேரி மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்று தெரிவித் துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x