Published : 30 Jan 2018 08:58 AM
Last Updated : 30 Jan 2018 08:58 AM

மயானம் இல்லாததால் சாலையோரம் சடலங்கள் புதைப்பு

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் அருந்ததிபாளையம் பகுதியில் மயானம் இல்லாததால் அப்பகுதி மக்கள் சாலையோரம் உள்ள பொது இடத்தில் சடலங்களைப் புதைத்து வருகின்றனர்

இதுதொடர்பாக ‘தி இந்து’ உங்கள் குரல்’ தொலைபேசி சேவை வழியாக அருந்ததி பாளையத்தைச் சேர்ந்த கே.ராதாகிருஷ்ணன் என்பவர் கூறியிருப் பதாவது:

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றி யம் படுநெல்லி ஊராட்சியில் அருந்ததிபாளையம் உள்ளது. இப்பகுதியில் மயானம் இல்லை. இங்கு யாராவது இறந்தால் அவர்களைச் சாலையோரம் உள்ள பொது இடங்களில் புதைத்து வருகின்றனர். சுடுகாடு கேட்டு பலமுறை மனு கொடுத்துள்ளோம். கிராமசபைக் கூட்டத்துக்கு கோவிந்தவாடி அகரம் வந்த மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையாவிடமும் மனு அளித்துள்ளோம். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் படுநெல்லி ஊராட்சியில் உள்ள சுடுகாட்டுக்கு சடலத்தைக் கொண்டு சென்று எங்கள் பகுதி மக்கள் அடக்கம் செய்தனர். ஆனால் அப்பகுதியில் சடலத்தை எடுத்துச் செல்லும்போது பிரச்சினை ஏற்பட்டதால் 20 ஆண்டு களாகச் சாலையோரம்தான் அடக்கம் செய்து வருகிறோம். எங்களுக்குத் தனியாக மயானம் அமைத்துத் தர வேண்டும் என்றார்.

இதுகுறித்து வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) வேங்கடேசனிடம் கேட்டபோது, ``அருந்ததிபாளையத்தில் அருந்ததியின மக் கள் வசித்து வருகின்றனர். தற் போது அவர்கள் சாலையோரம் உள்ள பொது இடம் ஒன்றைச் சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்குத் தனியான சுடுகாடு அமைப்பதற்கான திட்ட அறிக்கை ஒன்று அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x