Published : 11 Oct 2023 06:20 AM
Last Updated : 11 Oct 2023 06:20 AM

மத்திய அரசை கண்டித்து அக்.16-ல் திருச்சியில் ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு

சென்னை: காவிரி, 100 நாள் வேலைத் திட்ட விவகாரங்களில் மத்தியஅரசைக் கண்டித்து அக்.16-ம்தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோஅறிவித்துள்ளார். இதுதொடர் பாக அவர் நேற்று விடுத்த அறிக்கை:

உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரியில் இருந்து நீர் திறக்க கர்நாடக அரசை வலியுறுத்தியும், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது எனதூண்டிவிட்டு கர்நாடகத்தில் போராட்டம் நடத்தும் பாஜகமற்றும் கன்னட அமைப்புகளைக் கண்டித்தும், தமிழகத் துக்கு வழங்க வேண்டிய நீரை திறக்க காவிரி ஆணையம் உத்தரவிட வலியுறுத்தியும், தமிழகஅரசு பலமுறை வலியுறுத்திய பின்பும் பாராமுகமாகச் செயல்படும் மத்திய பாஜக அரசைக்கண்டித்தும், 100 நாள் வேலைதிட்ட நிதியை குறைத்தும், மாநிலங்களுக்கு நிதியை விடுவிக்காமலும் அலட்சியப்படுத்தி வரும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் மதிமுக சார்பில் அக்.16-ம் தேதி காலை 10 மணிக்கு திருச்சியில் கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x