Published : 10 Oct 2023 06:10 AM
Last Updated : 10 Oct 2023 06:10 AM
சென்னை: தமிழக அரசு சார்பில் தூய்மைப் பணியாளர்களை கணக்கெடுக்கும் பணி 646 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பரில் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ்நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பல்வேறு நலத் திட்டங்கள் வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, சென்னை மாநகராட்சியில் திரு.வி.க.நகர்மண்டலம், மதுரை மாநகராட்சியில் 3-வது மண்டலம், புதுக்கோட்டை மற்றும் பொள்ளாச்சி நகராட்சிகள், சேரன்மாதேவி பேரூராட்சி என 5 நகர்ப்புற உள்ளாட்சிஅமைப்புகளில் பணியாற்றும்தூய்மைபணியாளர்கள் குறித்தகணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி 2 ஆயிரத்து 198 பயனாளிகள் தேர்வுசெய்யப்பட்டனர்.
2-ம் கட்டமாகதூய்மைப் பணியாளர்களை கணக்கெடுக்கும் பணிகள் 646நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (NULM) மூலம்மகளிர்குழு உறுப்பினர்கள் கணக்கெடுப்பாளர்களாக தேர்வு செய்துபயிற்சி அளிக்கப்பட உள்ளது.
முக்கிய தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாரியம் மூலம், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சுய தொழில் பயிற்சி, தொழில் கடன் பெறவும், மத்திய மற்றும் மாநிலஅரசுகளின் விபத்து காப்பீட்டுத் திட்டங்களில் சேர்ந்து பயன்பெறவும் முயற்சிகள் எடுக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT