

19 ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் ஒரு வழக்கிற்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட நிலை யில் அங்குள்ள ஆற்றங்கரை அருகே இருந்த ஒரு மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார்.
இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவு மூலம் விசாரணையை 2013-ம் ஆண்டு தொடங்கிய சி.பி.ஐ கடந்த மே 27 அன்று தமிழக காவல்துறையில் மதுரைக் காவல் கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆணையராக இருந்த கஸ்தூரி காந்தி மற்றும் திருச்சியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்த ரவி ஆகியோரை கைது செய்தது.
இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் 3 இடங்க ளில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அவருக்கு உடனே தீவிர இதய சிகிச்சை தேவைப் படுகிறது. அதற்குரிய வசதிகள் கொண்ட தனியார் மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தை அணுகி காந்தியின் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி காந்திக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில் சி.பி.ஐ தரப்பில் நீதி மன்றத்தில் காந்தி சிறையிலடைக் கப்படக் கூடிய அளவில் உடல் நலத்துடன் உள்ளார் என ஆதாரத்துடன் எடுத்துரைக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து சனிக் கிழமை நள்ளிரவு 11.30 மணிய ளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையமருகே உள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து காவல்துறை பாதுகாப்புடன் காந்தி அழைத்துச் செல்லப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 40 நாட்கள் மருத்துவமனை வாசத்தை முடித்துக் கொண்ட காந்தி முதல்முறையாக இப்போது சிறை வாசத்தை அனுபவிக்கத் தொடங்கியுள்ளார்.