நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவி விவகாரம்: திருப்பத்தூர் ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை

நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவரை பதவி பிரமாணம் செய்து வைக்கக்கோரி, ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவரை பதவி பிரமாணம் செய்து வைக்கக்கோரி, ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
Updated on
1 min read

திருப்பத்தூர்: நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவரை பதவி பிரமாணம் செய்து வைக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பேச்சு வார்த்தை நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் ஊராட்சி ஒன்றியம் நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவராக இந்துமதி பாண்டியன் போட்டியின்றி தேர்ந் தெடுக்கப்பட்டார். ஆனால், இதுவரை அவர் பதவி ஏற்றுக் கொள்ளவில்லை. இதுதொடர் பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்துமதி பாண்டியனுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், ஊராட்சி மன்றத் தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கோரி ஆம்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை யில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடை பெற்றது. அப்போது, ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ஊராட்சி மன்றத் தலைவராக பதவி பிரமாணம் செய்து வைப்பதற்கு சில சட்ட பிரச்சினைகள் உள்ள தாகவும், இதனை விரைவில் முடிவுக்கு கொண்டு வர அரசு, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கூறினார்.

கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஓம்பிரகாசம், இந்துமதி பாண்டியன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in