

சென்னை: திமுக ஃபைல்ஸ் குறித்த தன்னுடைய கருத்தில் எந்த தவறும் இல்லை என்றும், திமுக எம்.பி டி.ஆர்.பாலு தொடர்ந்துள்ள அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் திமுக மூத்த நிர்வாகிகளின் சொத்து பட்டியலை அண்ணாமலை கடந்த ஏப்.14-ம் தேதி வெளியிட்டு இருந்தார். அதையடுத்து திமுகஎம்.பியும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு, அண்ணாமலைக்கு எதிராக ரூ.100 கோடி இழப்பீடு கோரி அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் அண்ணாமலை நேற்று இரண்டாவது முறையாக சைதாப்பேட்டை பெருநகர 17-வது நீதித்துறை குற்றவியல் நடுவரான நீதிபதி அனிதா ஆனந்த் முன்பாக ஆஜரானார். டி.ஆர்.பாலு தரப்பில் வழக்கறிஞர் ரிச்சர்ட்ஸன் வில்சனும், அண்ணாமலை தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜூம் ஆஜராகினர். ஆதாரங்கள் உள்ளன அப்போது அண்ணாமலையிடம் டி.ஆர்.பாலு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கு தொடர்பாக நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு அண்ணாமலை திமுக ஃபைல்ஸ் குறித்த தனது கருத்தில் எந்த தவறும் இல்லை என்றும், தன்னிடம் அதற்கு தகுந்த ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறி தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்தார். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை டிச. 21-ம் தேதிக்கு தள்ளிவைத்து அன்றைய தினமும்அண்ணாமலை நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
எதிர்கொள்ளத் தயார் அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, திமுக ஃபைல்ஸ் குறித்த தனது கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும், டி.ஆர்.பாலு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக வும் தெரிவித்தார்.