

ராமநாதபுரம்: பட்டா மாறுதலுக்கு ரூ.1 லட்சம்லஞ்சம் வாங்கிய ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் தென்னரசுவை ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வட்டம்வில்லடிவாகை குரூப் ரெட்டையூரணி கிராமத்தில், 20 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார்.
இந்த நிலத்துக்கு தனது பெயரில் பட்டா மாறுதல் செய்யக் கோரி, ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் தென்னரசை அணுகியுள்ளார். பட்டா மாறுதலுக்கு வட்டாட்சியர் தென்னரசு(55), ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டு, முதல் தவணையாக ரூ.1 லட்சம் தருமாறு வலியுறுத்திஉள்ளார்.
இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத கருப்பையா, ராமநாதபுரம் மாவட்டலஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில்புகார் செய்தார். போலீஸாரின்ஆலோசனைபடி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த தென்னரசுவிடம் கருப்பையா நேற்று அளித்தார்.
அப்போது மறைந்திருந்த ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி ராமச்சந்திரன், ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸார், வட்டாட்சியரை கைதுசெய்தனர். மேலும், அவரிடமிருந்து ரூ.1 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
பின்னர், வட்டாட்சியர் அலுவலகம், ஜீப், ஆர்.எஸ்.மங்கலத்தில் வட்டாட்சியர் தங்கியிருந்த அறைமற்றும் விருது நகரில் உள்ளஅவரது வீடு ஆகிய இடங்களில்லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.