தமிழகம்
வீடுகளின் பூட்டை உடைத்து 97 பவுன் கொள்ளை
கொடுங்கையூரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற போலீஸ் எஸ்.ஐ. பூபதி (62). குடும்பத்தோடு வெளியூர் சென்றவர், நேற்று காலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து கொடுங்கையூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
ஆயிரம் விளக்கு சுதந்திரா நகரைச் சேர்ந்த ரோஸ்மேரி (67), நேற்று முன்தினம் வேறு வீட்டுக்கு குடிமாறினார். சில பொருட்கள் புது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பீரோவை பழைய வீட்டில் வைத்திருந்தார். நேற்று காலை அங்கு சென்று பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த 47 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.20 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.
