இஸ்லாமியர் விடுதலை தொடர்பாக பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்: பழனிசாமியிடம் தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்

சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை நேற்று சந்தித்த மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி.
சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை நேற்று சந்தித்த மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி.
Updated on
1 min read

சேலம்: தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இஸ்லாமியர்களை விடுவிக்க, சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியிடம், மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தினார்.

சேலத்தில் பழனிசாமியை, மஜக தலைவர் தமிமுன் அன்சாரி நேற்று சந்தித்தார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி உடனிருந்தார். பின்னர், தமிமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலைசெய்ததைப்போல, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம். தமிழக முதல்வரிடமும் கோரிக்கை விடுத்தோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே, இது தொடர்பாக சட்டஅமைச்சர் ரகுபதி, காங்கிரஸ் தலைவர் அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து, கோரிக்கை விடுத்து வருகிறோம். மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில், சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதற்காக பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தோம்.

மேலும், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது, சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்க வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும் அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது துணிச்சலான முடிவு. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்திய பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் நடவடிக்கை, வி.பி.சிங் கொண்டுவந்த மண்டல் கமிஷன் அறிக்கையைப்போல தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழகத்திலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in