மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் திருமாவளவன்

மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் திருமாவளவன்
Updated on
1 min read

சென்னை: காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நேற்று வீடு திரும்பினார்.

கடந்த 25-ம் தேதி. விசிக தலைவர்திருமாவளவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஓய்வு அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் மருத்துவமனையிலேயே இருந்து வந்தார். அவரை சந்திக்க தொண்டர்கள் யாரும் வரவேண்டாம் என கட்சித் தலைமை கேட்டுக்கொண்டது.

மருத்துவமனையில் இருந்த திருமாவளவனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் தொலைபேசி வாயிலாகவும், அமைச்சர் சி.வி.கணேசன், மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ உள்ளிட்டோர் நேரிலும் நலம் விசாரித்தனர். இந்நிலையில், திருமாவளவன் முற்றிலுமாக குணமடைந்ததையடுத்து, நேற்று வீடு திரும்பினார். தொடர்ந்து சில நாட்கள் அவர் வீட்டில் ஓய்வெடுக்க இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in