மதுரை குடிநீர் திட்டத்துக்காக லோயர் கேம்ப்பில் இறுதிக்கட்டத்தில் நீரேற்று நிலைய கட்டுமான பணி

லோயர்கேம்ப் பெரியாற்றின் கரையில் நடந்து வரும் தலைமை நீரேற்று நிலையக் கட்டுமானப் பணி.
லோயர்கேம்ப் பெரியாற்றின் கரையில் நடந்து வரும் தலைமை நீரேற்று நிலையக் கட்டுமானப் பணி.
Updated on
1 min read

கூடலூர்: மதுரை மாநகரக் குடிநீர் திட்டத்துக்காக லோயர் கேம்ப்-பில் நடந்து வரும் தலைமை நீரேற்று நிலைய கட்டுமானப் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

மதுரை மாநகராட்சி தினமும் 125 மில்லியன் கனஅடி நீர் பெறும் வகையில் தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் புதிய குடிநீர் திட்டப் பணிகள் ரூ.1,295.76 கோடி மதிப்பில் நடந்து வருகின்றன. இதில், தலைமை நீரேற்று நிலையம் மற்றும் பெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளும் நடந்து வருகின்றன.

25 மீட்டர் நீள, அகலம் மற்றும் 22 மீட்டர் ஆழமாகவும் கட்டப்பட்டு வரும் தலைமை நீரேற்று நிலையப் பணி தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. இத்திட்டத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்கும் வகையில், அருகிலேயே முல்லை பெரியாற்றின் குறுக்கே தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளது.

தடுப்பணையிலிருந்து தலைமை நீரேற்று நிலையத்துக்குக் கொண்டுசெல்லப்படும் தண்ணீர், அங்கி ருந்து குழாய் மூலம் திண்டுக்கல் மாவட்டம் பண்ணைப்பட்டிக்கு எடுத்துச் செல்லப்படும். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இத்திட்டத்தின் முக்கியப் பணியாக தலைமை நீரேற்று நிலைய கட்டுமானப் பணி இருந்தது.

ஆனால், இங்கு நீர் ஊற்று வந்து கொண்டே இருந்ததால் கட்டுமானப் பணி பெரும் சவாலாக இருந்தது. தொடர் முயற்சி காரணமாக, ஒரு மாதத்துக்குள் இப்பணி முடிக்கப்படும். தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளதால், 2 மாதத்துக்குள் தேனி மாவட்டத்தில் நடந்து வரும் இப்பணிகள் அனைத்தும் முழுமை யடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in