Published : 05 Dec 2017 09:45 AM
Last Updated : 05 Dec 2017 09:45 AM

50 நாடுகளில் இருந்து 150 திரைப்படங்கள் பங்கேற்பு: சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 14-ம் தேதி தொடங்குகிறது

சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 14-ம் தேதி தொடங்குகிறது. இந்தோ சினி அப்ரிசியேஷன் அமைப்பு நடத்தும் இந்த திரைப்பட விழாவை என்எஃப்டிசி, ‘தி இந்து’ மெட்ரோ ப்ளஸ், ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இணைந்து வழங்குகின்றன.

15-வது திரைப்பட விழா

இதுகுறித்து திரைப்பட விழா இயக்குநர் இ.தங்கராஜ் கூறியதாவது:

சென்னை சர்வதேச திரைப்பட விழாவை தமிழக அரசின் ஆதரவோடு ஒருங்கிணைத்து நடத்துகிறோம். இது 15-வது திரைப்பட விழாவாகும். இந்தோ சினி அப்ரிசியேஷன் அமைப்பு நடத்தும் இந்த திரைப்பட விழாவை தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் (என்எஃப்டிசி), ‘தி இந்து’ மெட்ரோ ப்ளஸ், ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இணைந்து வழங்குகின்றன.

இந்த விழா டிசம்பர் 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை தொடர்ச்சியாக நடக்கிறது. ஸ்வீடன், இங்கிலாந்து, ஜெர்மனி, கொரியா, இந்தியா உள்ளிட்ட 50 நாடுகளின் 150-க்கும் அதிகமான திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட உள்ளன.

எம்ஜிஆர் படங்கள்

உலக சினிமா, இந்திய சினிமா, சமகால ஜெர்மானிய படங்கள், இந்தியன் பனோரமா, தமிழ்ப் படங்கள் என பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

சிறந்த 12 தமிழ் திரைப்படங்கள்

இதில் சிறந்த 12 தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, எம்ஜிஆர் நடித்த 2 படங்களும் திரையிடப்பட உள்ளன.

இதன் தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் டிசம்பர் 14-ம் தேதி மாலை 6 மணி அளவில் நடக்க உள்ளது.

சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸ், ரஷ்ய கலாச்சார மையம், தேவி, தேவிபாலா, அண்ணா திரையரங்கம், தாகூர் பிலிம் சென்டர் ஆகிய திரையரங்குகளில் படங்கள் திரையிடப்படும். இவ்வாறு திரைப்பட விழா இயக்குநர் இ.தங்கராஜ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x