

ராமேசுவரம்: காலாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் தொடர் விடுமுறையால் தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு நேற்று வந்தனர். ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் பக்தர்களும், தனுஷ்கோடி கடலில்சுற்றுலாப் பயணிகளும் குழந்தைகளுடன் நீராடி மகிழ்ந்தனர்.
மேலும், ராமேசுவரம் கோயிலில் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் ராமநாத சுவாமி கோயில், கலாம் தேசிய நினைவிடம், தனுஷ்கோடி, பாம்பன் பாலம் பகுதிகளில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.